Home
- Details
- Super User
- About us
- Hits: 7080
About us
புனித பத்திரிசியார் கல்லுரியின் பழைய மாணவர் சங்கம்.
புனித பத்திரிசியார் கல்லுரியின் பழைய மாணவர் சங்கமானது எமது பாடசாலையின் கல்வி, விளையாயட்டுத்துறை வழர்ச்சிக்கும் இன்னுமாய் பாடசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகளில் அவர்களிற்கு கைகொடுத்து உதவுவதையும் மையமாகக் கொண்டு நோர்வே பேர்கன் நகரில் இயங்கிவருகின்றது. இச்சங்கத்திற்கு போர்கன்வாழ் பழைய மாணவர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றார்கள்.
கடந்த நாட்களில் எமது பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் பல உதவித்திட்டங்களை எமது பாடசாலைக்கு செய்து வந்துள்ளோம். இனிவரும் நாட்களிலும் இதைப்போன்ற உதவிகளை தொடர்வோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பேர்கனிலும் பழைய மாணவர்களிற்கான கரப்பந்தாட்ட அணி ஒன்றையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒழுங்கமைத்து அதற்கான பயிற்சிகளையும் ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றோம்.
இதைவிட பேர்கன்வாழ் சிறார்களிற்கான பூப்பந்தாட்டப் பயிற்சிகளையும் கடந்த 5 வருடங்களிற்கு மேலாக இலவசமாக நடாத்திவருகின்றோம்.
அதுமட்டுமன்றி கரப்பந்தாட்ட மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகளையும் வருடாவருடம் நடத்தி வருகின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
St. Patrick’s college, Jaffna
Old Boys Association Bergen, Norway
Org.nr. 994 915 975